பசங்க படத்தில் நடித்த சின்ன பையனா இது?…. இப்போ ஹீரோ போல இருக்காரே…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். அவ்வகையில் ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு படம் தான் பாண்டியராஜனின் பசங்க. இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படத்தில் சிறுவர்களின் சுட்டித்தனமே அதிகமாக இருக்கும்.

அப்படி பசங்க திரைப்படத்தில் அன்புக்கரசு என்ற நூலில் நடித்த குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.அது மட்டுமல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் சிறந்த திரைக்கதை காண விருதும் அப்படத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த இப்படத்திற்கு மாநில அரசு அவ் வருடத்திற்கான விருதையும் தற்போது அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சில நாட்களுக்கு முன் பிரமாண்டமாக நடைபெற்றது.அதில் பட நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கிய கௌரவிக்கப்பட்ட நிலையில் பசங்க படத்தில் நடித்த கிஷோருக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தில் சின்ன பையனாக நடித்த கிஷோர் தற்போது தாடி வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோ போல மாறியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.