திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகல…. அதுக்குள்ள இப்படியா பண்ணுவீங்க?…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மகாலட்சுமி….!!!!

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெஸார்ட்டில் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை மகாலட்சுமி இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருமணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அதற்குள் ரவீந்தர் கட்டியை தாலியை கழட்டி புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஏன் தாலியை கழட்டி விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.