“என் பொண்டாட்டி குளிக்கவே மாட்டா”…. ரகசியங்களை புட்டு புட்டு வைத்த ரவீந்தர்…. காதல் போதையில் இப்படியா….????

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் அடுத்தடுத்து பல சேனல்களுக்கு பேட்டியளித்து வருவதால் இவர்கள் குறித்த செய்தி தான் பெரும்பாலும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உச்சகட்ட காதல் போதையில் அவர்கள் ஓவர் சீன் போட்டு உலகை வருவது தற்போது கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதாவது தங்களுடைய பர்சனல் விஷயங்களை கூட கூச்சப்படாமல் ரவீந்தர் வெளிப்படையாக அப்படியே கூறி வருகிறார். மகாலட்சுமியின் டூத் பிரஷ்ஸில் தான் பல்லு விளக்குகிறாராம்.

அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்கும் ரவீந்திரன் சூட்டிங் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி குளிக்கவே மாட்டார் என்ற ரகசியத்தையும் கூறியுள்ளார். மேலும் திருமணத்தைப் பார்த்து சில ரசிகர்கள் தரம் தாழ்ந்த கருத்துக்களை பதிவிட்டு வருவதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் மகாலட்சுமிக்கு ஒரு வாட்டர் பெட் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

மகாலட்சுமி பொது இடம் என்று பார்க்காமல் அவர் என்னிடம் ரொமான்டிக்காக இருக்க மாட்டார் எனவும் முத்தம் கொடுக்க மாட்டார் என ரவிந்தர் கூறியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களை கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.