பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்…. ஒன்றாக வந்த பிரபல தமிழ் நடிகர் – நடிகை…. காதலை கன்ஃபார்ம் பண்ண ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் சித்தார்த். அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மறுபக்கம் தெலுங்கிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்தடுத்து பல படங்களில் ஹிட் கொடுத்து வருகிறார்.

இதனிடையே அவ்வபோது காதல் சர்ச்சையில் சிக்கும் இவர் சில வருடங்களுக்கு முன்பே நடிகை சமந்தாவை காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவியது. அதனைத் தொடர்ந்து நாக சைதன் யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக இணையத்தில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இது குறித்த தகவலை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவுக்கு ஜோடியாக வருகை தந்தனர்.

இணையத்தில் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது அவர்கள் ஜோடியாக வந்திருப்பது இருவருக்கும் இடையே உள்ள காதலை உறுதி செய்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் மணிரத்தினம் இயக்கத்தில் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.