குழந்தை பிறந்ததும் இப்படியா..? உடல் எடை குறைந்து, மெலிந்து காணப்படும் பிரபல தமிழ் நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நமீதா. தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர். இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து இவர் சற்று விலகி இருந்தாலும் இன்றளவும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்த நமிதா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றியை தந்தாலும் சில படங்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தனர். இதனிடையே திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில் பிரசவத்திற்கு பின்னர் நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் கொழு கொழு என இருந்த நம்ம நமீதாவா இது எலும்பு தெரியும் அளவுக்கு இவ்வளவு ஒல்லியாகி விட்டார்களே என்று வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.