கல்யாணம் ஆகாமலே கர்ப்பமாகலாம்…. அது ஒன்னும் தப்பு இல்ல…. பரபரப்பை கிளப்பிய நடிகை தபு….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை தபு. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான காதல் தேசம்,அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவருக்கு வயது 50 கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கின்றார். இருந்தாலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனது கேரியரை தொடங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்திய ரீமேக்கில் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எல்லா பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உள்ளது.

அதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் செஞ்சிக்காமலேயே கர்ப்பம் ஆகலாம்.ஒருவேளை எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தால் நான் வாடகைத்தாய் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்வேன். என் வாழ்க்கையில் என்னை பொறுத்தவரை திருமணம் என்பது அவசியம் இல்லாத ஒன்று என்று இவர் கூறியுள்ள இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.