இத்தனை வருடம் ஆச்சி…. இன்னும் அழகு குறையாம அப்படியே இருக்கும் ஜெயம் பட நடிகை…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது அவர் தனது நண்பர்களுடன் ட்ரக்கிங் சென்றுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை வருடமாகியும் சற்றும் அழகு குறையாமல் இன்னும் அப்படியே இருப்பதாக கமாண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.