பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்?…. இனி அவருக்கு பதில் இவர்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினியாக வினிஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு முக்கிய காரணம்பாரதி கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான்.

தினம் தோறும் ஏதாவது புதிய ட்விஸ்ட் உடன் சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது இதன் மவுசு குறைந்துள்ளது. இதில் ஆரம்பத்திலேயே டி என் ஏ டெஸ்டை அப்போவே எடுத்துட்டு அப்படியே கதையை நகர்த்தி நகர்த்து இருந்தால் கூட இந்த அளவிற்கு சீரியல் இறங்கி போய் இருக்க வாய்ப்பு இல்லை.

தற்போது சீரியல் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு கதையை கொண்டு போய் இருக்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒன்று சேர்வார்களா மாட்டார்களா இந்த கதை எப்போதுதான் முடியும் என்று ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு சீரியல் வந்துவிட்டது.

 

இப்படியான நிலையில் ரசிகர்கள் தினம்தோறும் சீரியலை கலாய்த்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் சீரியல் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாந்த் சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ஆரியன் இந்த சீரியலில் களமிறங்குவது போன்ற புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.