தங்கக்கட்டில் முதல் மாளிகை வீடு வரை….. மனைவிக்கு பரிசுகளை குவித்த ரவீந்தர்…. கேட்டா தலையே சுத்துது….????

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இதனிடையே திருமணத்திற்கு பின்னர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி அளித்த பேட்டிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு போட்டோ சூட் நடத்துவதில் இருவரும் பிசியாக இருந்து வரும் நிலையில் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் தேன்நிலவு கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவிக்காக விலைமதிப்பில்லா பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தங்கத்திலான கட்டில், 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடு மற்றும் 300-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள் ஏராளமான நகைகள் என தனது மனைவிக்கு சொல்ல முடியாத அளவிற்கு பரிசு பொருட்களை வாரி வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ரவிந்தர்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.