சத்தம் இல்லாமல் பிரபல நடிகையுடன் திருமணம் முடித்த…. குருதி ஆட்டம் பட இயக்குனர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஸ்ரீ கணேஷ். மிஸ்கின் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அவ்வகையில் கடந்த மாதம் வெளியான குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்தார். அப்படத்தில் அதர்வா,பிரியா பவானி சங்கர் மற்றும் ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் படத்தில் பல வன்முறை காட்சிகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஸ்ரீ கணேஷ் அடுத்த படங்களில் குறைகளை சரி செய்வதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ கணேஷ் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். வந்தார் சுகாசினி சஞ்சீவ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அது மட்டுமல்லாமல் வனம் மற்றும் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீ கணேஷ் மற்றும் சுகாசினி சஞ்சீவ் நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.