பார்சிலோனாவின் சர்ச் முன்பு…. வேற லெவலில் போஸ் கொடுத்த நயன் – விக்கி…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று இருந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில் கடந்த வாரம் இரண்டாவது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.அங்கு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் ரொமான்டிக்கான புகைப்படங்களை அவ்வபோது விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பார்சிலோனாவின் ஒரு சர்ச் முன்பு நின்று நயன்தாராவுக்கு முத்தம் கொடுப்பது போல புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.