பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்…. கடுப்பை கிளப்பிய பிரபல நடிகர்…. அடுத்த பட வாய்ப்பு கிடைக்குமா….????

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார்.

இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த விழாவில் சோழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரம் இப்படத்தைப் பற்றி விழாவில் நிறைய பேசி இருந்தார்.

அப்போது சோழர்களைப் பற்றியும் மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றியும் மிக பெருமையாக பேசி புகழ்ந்து தள்ளினார். இதனால் விக்கிரமை வைத்து அடுத்து படம் எடுக்க இருக்கும் பா. ரஞ்சித் தரப்பிற்கு பெரிய கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாம். காரணம் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி இழிவாக பேசிய வீடியோ ஒன்று வைரலானது.மேலும் தமிழர்கள் பலரும் அவருக்கு எதிராக பல கருத்துக்களையும் பதிவிட்டு வந்த நிலையில், விக்ரம் இப்படி புகழாரம் ஆக பேசி இருப்பது ரஞ்சித் தரப்பிற்கு பெரிய கடுப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.