இவருக்கா இப்படி ஒரு நிலை?…. காதல் பட நடிகர் குடும்பத்திற்காக என்ன வேலை செய்கிறார் தெரியுமா?…. கலங்க வைக்கும் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்கும். அவ்வகையில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் பாரத் மற்றும் சந்தியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அருண். காதல் திரைப்படத்தில் படத்துடன் மெக்கானிக்கல் செட்டில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் தான் இந்த அருண். மதுரையை சேர்ந்த இவர் காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார்.

பிறகு இவர் வளர தொடங்கியவுடன் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது. சில காலத்திற்குப் பிறகு இவர் என்ன ஆனார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இதனிடையே இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து இரு வீட்டால் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானது.

இவர் தற்போது பர்னிச்சர், கட்டில் மற்றும் பீரோ போன்ற மர வேலைகள் செய்யும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தான் படும் கஷ்டங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் பலரையும் அது கண்கலங்க வைத்துள்ளது.