உலக நாயகனுடன் இணையும் தளபதி விஜய்?…. படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?…. செம மாஸ் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒன்றாக இணைந்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில் கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கப் போவதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஏனென்றால் வாரிசு படத்தை முடித்த கையோடு விஜய் அடுத்தடுத்து பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.அதனைப் போலவே வெற்றிமாறனுக்கும் கமல் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் கைவசம் இருக்கின்றன.

எனவே இன்னும் ஒரு சில வருடங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி இருவரும் இணைந்து பணியாற்றினால் கட்டாயம் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.