டிவியில் ஓடிய பாட்டு…. பேரனுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த பாண்டியராஜன்…. இணையத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் பாண்டியராஜன். இவரை புதுமைகளை மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். தன்னுடைய இளம் வயதிலேயே கலை துறையின் மேல் ஈடுபாடு அதிகம் இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் தோற்றம் மற்றும் உயரம் எதுவும் முக்கியமில்லை என்று நிரூபித்து காட்டிய கலைஞர் இவர்தான். இவருடைய பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இவரின் பார்வையே பலரையும் வெகுவாக கவரும்.பாண்டியராஜன் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் திருட்டு மொழி மற்றும் வெள்ளந்தியான பேச்சு தான்.

தன்னுடைய 23 வயதில் சினிமா உலகில் இயக்குனராக பிரபலமானவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். கன்னி ராசி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து ஆண் பாவம், மனைவி ரெடி மற்றும் கபடி கபடி போன்ற 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

இப்படி சினிமா துறையில் பல சாதனைகளைப் படைத்து கொடிகட்டி பறந்த இவர் சினிமாவில் இருந்து சற்று பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பாண்டியராஜன் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகின்றார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Prithvi Rajan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prithvipandiarajan)

இந்நிலையில் பாண்டியராஜன் மகன் பிரிதிவி பாண்டியராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.அந்த வீடியோவில் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியராஜனின் காதல் கசக்குதையா என்ற பாடலை பார்த்து அவரின் பேரன் ஆடிக்கொண்டிருந்த நிலையில் அவருடன் சேர்ந்து தாத்தா பாண்டியராஜை கையைப் பிடித்து அழைத்து வந்து தனக்கு நடனமாக சொல்லித் தருமாறு கேட்கிறார். தனது பேரனுக்காக பாண்டியராஜன் லுங்கியை மடித்து கட்டி பேரனுடன் நடனமாட கற்றுக் கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.