எங்க திருமணத்திற்கு இது ஒன்றுதான் காரணம்…. முதன்முறையாக மனம் திறந்த ரவீந்தர் – மகாலட்சுமி….!!!!

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரைஅன்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தங்களை குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பல்வேறு youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர். அவர்களின் பேட்டி தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அவ்வகையில் தங்களின் திருமணத்திற்கான காரணம் என்பது குறித்து முதல்முறையாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி வெளிப்படையாக உண்மையை கூறியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.