விஜய் டிவி புகழ் ரக்ஷன் நடிக்கும் புதிய திரைப்படம் இதுதான்…. போட்டோவுடன் வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ரக்ஷன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவ்வகையில் கலந்து 2019 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் விஜய் டிவி ஷோக்கலில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இவரின் பேச்சு மற்றும் குழந்தைத்தனமான காமெடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ரக்சன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. யோகேந்திரன் இயக்க சச்சின் வாரியார் இசையமைக்க உருவாகும் இந்த படத்தை பிலியா என்டர்டைன்மென்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dinesh M இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dheena_offl)

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அதனை கலக்கப்போவது யாரு புகழ் தீனா படப்பிடிப்பு தள புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.