பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் மகள்…. ட்ரெய்லரின் வெளிவந்த தகவல்…. அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரமா….???

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதில் பொன்னி நதி என்கின்ற முதல் சிங்கிள் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் படு பிரம்மாண்டமாக படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனிடையே தமிழ் சினிமாவில் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்த பெரிய அளவில் பிரபலமானவர்தான் சாரா அர்ஜூன். இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது குறித்த விஷயம் படத்தின் டிரைலரில்தான் தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி வேடத்தில் சிறுவயது கதாபாத்திரமாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.