அடடே சூப்பர்…. தயாரிப்பாளராகும் பிரபல தமிழ் நடிகரின் மனைவி…. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாபி சிம்ஹா. இவர் ஜிகர்தண்டா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இவருக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முத்ரா என்ற மகளும் 2019 ஆம் ஆண்டு அர்ஜூன் சிம்ஹா என்ற மகனும் பிறந்தனர்.

இந்நிலையில் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார்.அறிமுக இயக்குனர் ஜே வி மது கிரண் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ராவண கல்யாணம்.இப்படத்தில் பாபி சிம்ஹா மற்றும் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான சந்திப் மாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். சிதம்ப மனோகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுரபனேணி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தை ரேஷ்மி சிம்ஹா இயக்க உள்ளதால் நல்ல ஹிட் ஆகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி தனது குழந்தையுடன் பூஜையில் கலந்து கொண்டனர்.