“நான் அப்படி இல்ல” ஆனா இவரு”…. திருமணத்திற்கு பிறகு கணவருடன் நக்ஷத்ரா First Interview…. வைரல்….!!!

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகின்றார்.

இவர் கடந்த சில வருடங்களாக விஷ்வா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு  முன்பு இருவரும் உறவினர்கள் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டார் முன்னிலையில் மிக எளிமையான முறையில் கோவிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

நட்சத்திரா வின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர்களின் திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில்  திருமணத்திற்கு பிறகு நட்சத்திரா தனது கணவருடன் youtube சேனல் ஒன்று இருக்கு அழைத்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.