நான் வாங்கித் தரவே வேணாம்…. என் மகா ஏற்கனவே அது வச்சிருக்காங்க….. ரவீந்தர் ஓபன் டாக்….!!!

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை அன்மையில்  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

மேலும் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என அவர்களை வெளிப்படையாக கூறியுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இவர்களை திருமண கோலத்தில் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்கள். அதில் பல விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக அவ்வபோது ரவீந்தர் பல அதிரடி தகவல்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது மனைவிக்கும் ஏராளமான பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்.

இதனிடையே பணத்திற்காக தான் மகாலட்சுமி இரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடிக்கும் கொடுத்துள்ளார் மகாலட்சுமி. இந்நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாலட்சுமியின் அப்பா ஏற்கனவே பல கோடிக்கணக்கான சொத்துக்களை தனது மகளுக்கு சேர்த்து வைத்துள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் ஆடி கார் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.