“அட ஆமா”…. அப்படியே ஹாலிவுட் ஹல்க் போல இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் ஏ ஆர் ரகுமான். ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்து என்ற எல்லையையும் கடந்து ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார்.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அதுமட்டுமல்லாமல் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இசையமைத்துள்ளார்.அதன் பாடல்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் வந்த தோற்றத்தை பார்த்து அவர் ஹாலிவுட் மார்வெல் படங்களில் வரும் ஹல்க் போல இருப்பதாக கூறி வருகின்றனர். இருவரின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு சில மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.