பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்…. மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட தளபதி…. முதல்முறையாக வெளிவந்த ரகசியம்….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே அதில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தி தான் டாப்பில் உள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வந்திய தேவன் கதாபாத்திரம் குறித்து ரஜினியும் கமல்ஹாசனும் பேசியது, அந்தப் பெயரை அதிகம் முணுமுணுக்க வைத்துள்ளது. இதனிடையே வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவலும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர.