ஐஸ்வர்யா ராயின் கணவராக நடிக்கும் போது…. சூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த சரத்குமார்…. வைரலாகும் வீடியோ….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.2 நாட்களுக்கு முன்பு சென்னையில் படு பிரம்மாண்டமாக படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் ஐஸ்வர்யாராயின் கணவராக சரத்குமார் நடித்து அசத்தி இருக்கிறார்.அந்த அனுபவம் குறித்து சரத்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.