“இன்னும் 6 மாசம் தான் உயிரோடு இருப்பாங்க”…. பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகர்…. கதறி அழுத மனைவி….!!!!

தமிழ் சினிமாவின் விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு. இந்தத் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து அப்பு குட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படிப்பட்ட இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவன் குள்ளநரி கூட்டம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் அவரின் தற்போதைய நிலை குறித்து ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இன்னும் ஆறு மாதம்தான் அவர் உயிரோடு இருப்பார் எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் தன்னை வைத்துக்கொண்டு மனைவி படும் கஷ்டங்களை தாங்க முடியாமல் ஹரி வைரவன் எப்படியாவது என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கதறுகிறாராம்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.