அதுக்குள்ள இப்படியா?…. பிரபல நடிகையுடன் இணைந்த ஷங்கரின் மகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார்.

முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர். இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படங்களில் கலக்கி வரும் அதிதி சங்கர் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்துள்ள வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.