நயன் – விக்கி திருமண வீடியோவை வெளியிட்டு…. சர்ப்ரைஸ் கொடுத்த நெட்பிலிக்ஸ்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.

அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது 38 வது பிறந்த நாளை நயன்தாரா மட்டும் குடும்பத்துடன் துபாயில் கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை netflix நிறுவனம் மிக விரைவில் வெளியிட உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட்லிக்ஸ் நிறுவனம் ஏற்று இருந்த நிலையில் நயன்தாரா திருமணத்தை nayanthara beyond the fairy tale என்ற தலைப்பில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. இதனிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவின் டீசர் தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது.