அந்த நடிகை எனக்கு பொண்டாட்டி மாதிரி…. பரபரப்பை கிளப்பிய கூல் சுரேஷ்….. இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.

இந்நிலையில் மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் போது கூல் சுரேஷ் பேசி இருக்கும் சர்ச்சை பேச்சு ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ், அந்த படத்தில் வரும் நடிகை காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி, உங்களுக்கு பொண்டாட்டி மாதிரி, பக்கத்து வீட்டு பொண்டாட்டி மாதிரி எதார்த்தமான நடிப்பை நடித்திருக்கிறார். அவர் எதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை தான் நான் சொல்கிறேன் என கூல் சுரேஷ் கூறியிருந்தார். இப்படி இவர் சர்ச்சையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.