இவருக்கு என்ன ஆச்சு?…. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் பிரேம்ஜி….. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகன்தான் இவர். இவரின் அண்ணன் வெங்கட் பிரபு பிரபல இயக்குனர். இவர் இயக்கம் அனைத்து படங்களிலும் கட்டாயம் பிரேம்ஜி இருப்பார்.

தனது தம்பிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகின்றார். தற்போது பிரேம்ஜிக்கு 43 வயதாகிறது.ஆனால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டும் தான் முரட்டு சிங்கிள் என்று பதில் அளித்தார்.வீட்டில் பலமுறை வற்புறுத்தியும் தனக்கு திருமண ஆசை இல்லை என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் குண்டாக காணப்பட்ட பிரேம்ஜி தற்போது படு ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார். ஒருவேளை இவர் திருமணத்திற்காக தான் இப்படி உடலை குறைத்து இருக்கிறாரா என பலரும் கலாய்த்து வருகிறார்கள். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பிரேம்ஜி கலந்து கொண்ட நிலையில் அதில் மிகவும் ஒல்லியாக அவர் தோற்றமடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.