இந்த மனசு யாருக்குப்பா வரும்?…. ஏர்போர்ட்டில் அஜித் செய்த செயல்…. இணையத்தை தெறிக்க விடும் வேற லெவல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார். இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.  படத்தின் படப்பிடிப்பு அண்மையில் விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தற்போது காஷ்மீர் மற்றும் லடாக் என வட இந்திய எல்லையில் உள்ள குளிர் பிரதேசங்களில் தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ரைடு செய்து வருகிறார். இவர்களுடன் நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் ஏர்போட்டில் இருப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் செய்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு மனசா என்று பாராட்டி வருகிறார்கள்.