“இத வச்சு நிறைய பணம் பாத்துட்டாங்க”…. அதுக்கு நாங்க தான் கிடைச்சோமா…. வேதனையுடன் பேசிய ரவீந்தர்….!!!!

பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏனென்றால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் நடந்திருப்பது உண்மை இல்லையா அல்லது ஏதாவது சூட்டிங்கா என்று நம்புவதற்கு சில நாட்கள் ஆகிவிட்டது.

அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது.திருமணம் முடிந்த இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்த விமர்சனங்கள் என்னும் ஓயவில்லை.

இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார். இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் கூட மகாலட்சுமி சூட்டிங் ஸ்பாட்டிற்கு ரவீந்தர் சாப்பாடு எடுத்துச் சென்ற புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் ரவீந்தர் தங்களின் திருமணத்தை வைத்து பலரும் நிறைய பணம் சம்பாதித்து விட்டனர் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.