ஹோட்டலில் அர்ச்சனா செய்த அலப்பறை…. போட்டோ எடுத்து கலாய்த்த சாரா…. அப்படி என்ன பண்ணாங்க தெரியுமா….????

90களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அவ்வகையில் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக இருந்து வந்த அர்ச்சனா நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

அதன் பிறகு இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது. அவ்வாறு தொடர்ந்து தொகுப்பாளனி பணியை செய்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதனால் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அர்ச்சனா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகம என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ என்ட்ரி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து இவரின் மகள் சாராவும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாராய இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.

இதனிடையே சமீபத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் சென்றிருக்கக் கூடாது, அது தவறான முடிவு என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஹோட்டலில் சாப்பிடும் போது அர்ச்சனா பக்கத்து டேபிலில் எட்டிப் பார்த்ததை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சாரா தனது அம்மாவை கலாய்த்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.