நாயை கண்டுபிடித்தால் பரிசு…. அதுவும் இத்தனை லட்சமா?….. பிரபல நடிகை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்லப் பிராணிகள் மீது அதிக அன்பு செலுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களது குடும்ப உறுப்பினர்கள் போலவே செல்ல பிராணிகளும் குடும்பத்தில் ஒரு அங்கம் வகிக்கின்றன.குடும்ப உறுப்பினர்களை பார்த்துக் கொள்வது போலவே செல்ல பிராணிகளையும் அன்புடன் பார்த்துக் கொண்டு வளர்த்து வருகிறார்கள்.

அதில் ஒரு சில சமயங்களில் நாய் அல்லது பூனை ஏதாவது காணவில்லை என்றால் கண்டுபிடித்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என பல விளம்பரங்களும் வெளியிடப்படுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு பலரும் செல்ல பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டு உள்ளனர். அவ்வகையில் தற்போது ஒரு செய்தியை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகையான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். டைமன்ட் என பெயரிடப்பட்டுள்ள தனது செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை என்றும் அது மிகவும் வலியை தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அந்த நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8,12,555 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Paris Hilton இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@parishilton)

நாயை கொண்டு வந்து கொடுத்தால் அல்லது தகவலை ஏதாவது கொடுத்தால் எந்த கேள்வியும் கேட்காமல் பத்தாயிரம் டாலர்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.