காதலனுக்கு ஓகே சொன்ன பிரபல நடிகரின் மகள்…. அதுவும் இப்படியா?….. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அமீர் கான். இவர் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவருடைய படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். அப்படி திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவருடைய முதல் மனைவி ரீனா தாத்தாவிற்கு பிறந்தவர் தான் ஐரா.

இவர் கடந்த சில வருடங்களாக நூபுர் என்பவரை காதலித்து வந்ததாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் ஐரா தனது நீண்ட நாள் காதலர் நூபுர் ஷிகாரேவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக இணையத்தில் அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் லவ்வர் ஐராவை நோக்கி நடந்து சென்று உதட்டில் முத்தமிடுவதை காண முடிகிறது. பின்னர் அவர் முழங்காலில் இன்று மோதிரத்தை ஐராவுக்கு அணிவித்து ப்ரபோஸ் செய்தார். அதனை உடனே ஐரா ஏற்றுக் கொண்டார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ira Khan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@khan.ira)

கடந்த சில மாதங்களாக இவர்களின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்தாலும் இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளனர்.எனவே இந்த இளம் ஜோடிகள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.