சிம்புவுக்கு சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்…. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா தலையே சுத்துது….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணியின் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் மும்பை செல்லும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக அங்கு சென்று எப்படி டான் ஆகின்றனர் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நாயகி சித்தி இத்னானி நடித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசாரி கணேஷ் தயாரித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.அதேசமயம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் பட குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் .

குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மல்லிகை பூ பாடல் படத்திற்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.இந்நிலையில் படத்தின் வெற்றியாள் மகிழ்ச்சியாக உள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் சக்சஸ் மீட்டை நேற்றே சென்னையில் கொண்டாடினார். அதில் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சிம்புவுக்கு தன்னால் முடிந்த பரிசுகளை அவர் வழங்கினார்.

அதாவது இயக்குனர் கௌதம் மேலாண்மைக்கு பைக் மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை பரிசாக வழங்கியவர் சிம்புவுக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்து அசத்தியுள்ளார். அதாவது சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ஐசரி கணேஷ். டொயோட்டா நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த சொகுசு காரான toyato vellfire என்ற காரை சிம்புவுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை மட்டுமே சுமார் ஒரு கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.