
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது முன்பை விட கவர்ச்சிகளை அதிகப்படுத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாட்டில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
கிளாமர் இல்லாமல் ஜெயிப்பது கஷ்டம் மற்ற நடிகைகளின் போட்டி அதிகமாக இருப்பதால் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர் பக்கம் சென்று உள்ளார். தற்போது அவர் தொடை தெரிய ஒரு உடையில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாய்ப் பிளக்க வைத்துள்ளது.