பிக்பாஸ் ஆயிஷாவிற்கு 2 திருமணம் ஆகிடுச்சு…. பரபரப்பை கிளப்பிய ஆயிஷாவின் முன்னாள் காதலர்…. என்ன சொன்னார் தெரியுமா….????

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆயிஷா.இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு சில பிரச்சனை காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் நடித்த மாயா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியலில் ஆயிஷா நடித்து வந்தார். அதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழி சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.

இவர் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களிடம் மச்சி, மாமா என்று கூப்பிட்டு ஓவராக நடந்து கொள்கிறார். அதனால் பல பிரச்சனைகளும் இருந்தன. அனைவரிடமும் ஜாலியாக பேசுகிறேன் என்று சண்டை வாங்குவது, நடிப்பது போன்ற பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். அதே சமயம் ஆயிஷா கமலிடம் நடந்து கொண்ட விதம் பற்றி ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் ஆயிஷாவிற்கு இரண்டு திருமணம் ஆகி மூன்றாவதாக தான் என்னை காதலித்தார் என அவருடைய முன்னாள் காதலர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.