எல்லார் முன்னாடியும் கமலுக்கு ஐ லவ் யூ சொன்ன குஷ்பூ…. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா பண்ணுவீங்க?…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளது. அதில் குஷ்பூ மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவில் பேசிய குஷ்பூ, கமல்ஹாசனுக்கு ஐ லவ் யூ சொல்லி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.