அட யுவன் சங்கர் ராஜாவா இது?…. என்ன இப்படி மாறிட்டாரு…. மனைவி வெளியிட்ட போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன.

இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார். இப்படி சினிமா உலகில் வெற்றியை மட்டும் ருசித்துக் கொண்டிருக்கும் இவருக்கு நிஜ வாழ்க்கை என்னவோ கசப்பாக அமைந்துள்ளது.

அதாவது யுவன் சங்கர் ராஜா வாழ்க்கையில் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து பிரிந்தவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து உடனே அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் சிங்கிளாக வாழ்ந்து வந்த இவர் 2011 ஆம் ஆண்டு சில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். ஆனால் இரண்டாவது திருமண வாழ்க்கையும் இவருக்கு சரியாக அமையவில்லை. அவரையும் விவாகரத்து செய்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சப்ருன் நிஷா என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

மூன்றாம் திருமணத்திற்கு முன்பாக அப்துல் காலிஃப் என தனது பெயரை மாற்றிக் கொண்டார். இரண்டு திருமணங்களை செய்து பிரிந்த இவர் மூன்றாம் திருமணத்திற்கு பிறகு சற்று நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா உம்ரா என்ற புனித யாத்திரை செல்லும் புகைப்படத்தை அவரின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.