குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய ரம்பா…. தற்போதைய நிலை குறித்து அவரே வெளியிட்ட வீடியோ…..!!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே ரம்பா தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் நேற்று பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதிரடி இளைய மகள் ஷாஷா அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்து ரம்பா ஒரு பதிவு போட்டிருந்தார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

RambhaIndrakumar💕 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rambhaindran_)

இந்நிலையில் தற்போது ரம்பா மற்றும் குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.