விரைவில் டும் டும்…. முதல்முறையாக தனது வருங்கால கணவருடன் ஹன்ஷிகா….. அதுவும் எந்த இடத்தில தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

 

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு என அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து வந்த இவர் விஜய் மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளன.

 

இதனிடையே நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல் ஒன்று வெளியானது.அது குறித்து ஹன்சிகா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் நான்காம் தேதி அவரின் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.

 

அவரின் வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது. அதாவது ஹன்சிகா வரி நீண்ட கால நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான sohail kathuria என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் வருகின்ற டிசம்பர் இரண்டு முதல் நான்காம் தேதி வரை திருமண விழா நடைபெற உள்ளதாகவும் இது பற்றி அறிவிப்பை ஹன்சிகா விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

இந்நிலையில் ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் சோஹைல் அவருக்கு புரபோஸ் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.