
இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி என்ற திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க உள்ளார்.சரண் சர்மா இயக்க உள்ள இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூருடன் ராஜ்குமார் ராவ், குமுத் மிஸ்ரா,ராஜேஷ்வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது மிலி திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் Jhalak Dikhhla jaa 10 ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.அதில் அவர் மேடையில் பெல்லி டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.