தனி விமானத்தில் செம மாஸாக என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…. இணையத்தை தெறிக்க விடும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருவதாக  கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே பிரம்மாண்டஸ் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி தற்போது தனி விமானத்திலிருந்து இறங்கி வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்ம மாஸாக அவர் இருப்பதாக சொல்லி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.