
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் மற்றும் அவரது தந்தை கஸ்தூரிராஜா என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் தனுசுக்கு இரண்டு அக்காக்களும் உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே சினிமாவிற்கும் அவர்களுக்கும் ஒரு சிறு சம்பந்தம் கூட இல்லாமல் இருப்பதால் அவர்களைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தனுஷின் மூத்த அக்கா விமலா கீதா பல் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மீனாட்சி அம்மன் என்ற மருத்துவர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.அதே கல்லூரியில் பணியாற்றும் பாபு என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷின் இரண்டாவது அக்கா கார்த்திகா தேவி. இவரும் ஒரு மருத்துவர் தான்.
இவர் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் விஜயா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார்.
இதனிடையே தனுஷின் அழகிய குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனுஷின் இரண்டாவது அக்கா கார்த்திகா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.