
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அபிநவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் ஸ்வாதியாகவும் கண்மணி என்ற சீரியலில் சினேகா கதாபாத்திரத்திலும் நடித்தவர் தான் செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா . தற்போது இவர் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தவர்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் கலந்த வருடம் சீரியல் நடிகர் தீபக் குமாரை திருமணம் செய்து கொண்டார். பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. தீபக் பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதேசமயம் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்போது நடிப்பு வருகிறார்.
இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அபி நவ்யா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஷேர் செய்தார். இதனைத் தொடர்ந்து ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் அபிநயாவிற்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது .
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
மஞ்சள் நிற சேலையில் கை நிறைய வளையல்கள் உடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.