
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் ஆறாவது சீசன் தற்போது சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் உடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து மிகவும் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் மக்களுக்கு முகம் தெரியாத பல புது முகங்கள் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.
அதிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பவர்கள் தான் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.அவரைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த அசல் கோளாறு வெளியேறினார்.
அசல் நிவாஸினியுடன் பிக் பாஸ் வீட்டில் மிக நெருக்கமாக பழகி வந்தார்.அசல் வெளியே வந்ததும் தற்போது நிவாஷினி மிகுந்த சோகத்துடன் இருக்கிறார். இந்நிலையில் அசல் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனே அனைவருடனும் சகஜமாக பழகினேன். ஆனால் தொடக்கத்தில் நிவாஷினி உடன் நான் பேசவில்லை. இடையில் ஒரு டாஸ்கின் போது அவர் என்னுடன் நட்பாக பழக வேண்டும் என தெரிவித்தார். பிறகு தான் நாங்கள் பேசிய போது இருவருக்கும் vibe செட் ஆனது.
நான் மற்றவர்களிடம் பேசினால் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சிலர் நம்மிடம் ஒரு மாதிரியும் மற்றவர்களிடம் வேறு மாதிரியும் பேசுவது நிவாசினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அவளை நன்றாக புரிந்து கொண்டேன். அவளுக்கும் என்னை பிடித்ததால் நன்றாக பழகினோம். அவள் வெளியே வந்தவுடன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.எங்களுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது என அசல் தெரிவித்துள்ள நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.