
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு என்ற சீரியலில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சின்னத்திரையில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் என்ற சீரியல் தான்.
அதன் பிறகு சன் டிவியின் அழகு சீரியலில் நடித்து அசத்தார். வைஷ்ணவிக்கு அம்மா என்றால் உயிர்.அதனால் தனது பெயருக்கு பின்னால் அருள்மொழி என தனது அம்மாவின் பெயரை சேர்த்துக் கொண்டார்.சீரியலில் மட்டுமல்லாமல் சந்தானம் ஹீரோவாக நடித்த சபாபதி திரைப்படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்து அசத்தினார்.
அதேசமயம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வெகுவாக கவர்ந்தார்.தற்போது வானதி என்ற கதாபாத்திரத்தில் பேரன்பு சீரியலில் சூப்பரான மருமகளாக கலக்கி வருகிறார்.இந்த சீரியலில் இவர் எப்போதுமே புடவையுடன் தான் வலம் வருகிறார். அதேசமயம் சின்னத்திரையில் நீளமான முடியை கொண்ட நடிகையும் இவர்தான்.
இந்நிலையில் வைஷ்ணவி எமோஷனலாக தனது ரசிகர்களுடன் லைவில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.