“மேடம், உங்கள விட பப்லு மகன் 2 வயது மூத்தவர்”…. கேலி கிண்டலுக்கு வெளிப்படையாக பதில் அளித்த பப்லுவின் வருங்கால மனைவி….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தனது வருங்கால இரண்டாம் மனைவியுடன் முதன் முறையாக பப்லு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பல விமர்சனங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.

அப்போது பப்லுவின் வருங்கால மனைவியிடம் உங்களை விட பப்லுவின் மகளுக்கு வயது அதிகம், அவரை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அவருக்கு 27 வயது. என்னை விட இரண்டு வயது மூத்தவர் ஆனாலும் அவர் இப்போதும் குழந்தை தான்.

அவரைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் நீங்கள் நீங்களாக இருங்கள் என்பதுதான். அவர் மிகவும் திறந்த மனதுடன் இருக்கின்றார். அப்படிதான் அனைவரும் இருக்க வேண்டும்.அவரை நினைத்து நான் சந்தோசம் அடைகிறேன் என அவர் கூறியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.