பிக்பாஸ் ஏடிகே-வின் முன்னாள் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா…. இணையத்தில் வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!!

குழந்தை 2018 ஆம் ஆண்டு வெளியான ஆரியன் என்ற இசை ஆல்பம் மூலமாக பிரபலமானவர்தான் தினேஷ் கனகரத்தினம். இவர் முதன்முதலாக விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ஆத்திச்சூடி என்ற திரைப்படம் மூலமாக தனது முதல் சினிமா பாடலை பாடினார். அதனைத் தொடர்ந்து டி. இமான், ஏ ஆர் ரகுமான்,யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் போன்ற முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையிலும் இவர் கலக்கியுள்ளார்.

அதேசமயம் தனியாகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவரின் பல பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளன. மேலும் குறும்படங்களையும் இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஏ டி கே போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டிலும் பல பாடல்களை பாடியதை அனைவரும் பார்த்திருப்போம்.

இவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனிடையே தினேஷ் கனகரத்தினம் ஜேஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் தினேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.