பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அந்த உடை அணிந்து வந்த கமல்ஹாசன்…. ப்ரோமோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் ஆறாவது சீசன் தற்போது சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் உடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து மிகவும் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் மக்களுக்கு முகம் தெரியாத பல புது முகங்கள் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.

அதிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பவர்கள் தான் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.அவரைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த அசல் கோளாறு வெளியேறினார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் வரும் நிகழ்ச்சியில் யாரை கிழித்து தொங்கவிடப் போகிறார் என நிட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய கமல்ஹாசன் சோவின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் கிழிந்த ஆடையை ஒட்டு  போட்டு உள்ளது போல இருக்கும் பேண்ட்டை அணிந்து வந்துள்ளார் கமல்ஹாசன். கோடிக்கணக்கில் காசு இருந்தும் ஒட்டு போட்ட பேண்ட்டா நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.